PAGEVIEWERS

சோர்ந்து போக வேண்டாம் நண்பர்களே... திரு.தாமஸ் ராக்லேண்ட், TATA துணை பொது செயலாளர் , திருச்சி

இக்கடிதம் ஆச்சரியத்தையும் வேதனையையும் கொடுத்துள்ளது. ஆனால் நம் நம்பிக்கை மட்டும் குறையவில்லை. இடைநிலை ஆசிரியர் ஊதிய முரண்பாடுகளை களைய கோரியே TATA சார்பில் மனு அளிக்கப்பட்டது. மனு பரிசீலிக்கப்படாததால் நீதிமன்றம் சென்று நீதிமன்றம் மனுவை எட்டுவார காலத்திற்குள் பரிசீலிக்க உத்தரவிட்டது. எனவே தற்போது மனுவை பரிசீலித்து, ஏற்கனவே ஒரு நபர் குழுவும், ஊதிய குறை தீர்க்கும் பிரிவும் இடைநிலை ஆசிரியர்களுக்கு 9300- 34800 +4200 வழங்க இயலாததற்கு
என்னென்ன காரணங்களை கூறினார்களோ அதனையே இப்போது இந்த கடிதத்தில் கூறி கோரிக்கையினை நிராகரித்திருப்பது வேதனையும் ஆச்சரியமுமே. அடுத்தகட்ட முயற்சியாக TATA இதனை நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லும். இடைநிலை ஆசிரியர்களில் 01.06.2009 - க்குப்பின்னர்,  அதாவது ஆறாவது ஊதிய குழு நடைமுறைக்கு வந்த பின்னர் பணியில் சேர்ந்தவர்களோடு ஆறாவது ஊதிய குழு ஊதியத்தை ஒப்பிடுகையில், இந்த ஊதிய குழு நடைமுறைக்கு வராமல் இருந்திருந்தால் கூடுதல் ஊதியம் தற்போது பெற்றுகொண்டிருக்க இயலும். உதாரணத்திற்க்காக ஒன்றை குறிப்பிட்டுள்ளேன் .  இதனை யாராலும் மறுக்க இயலாது. இதனை இதற்கு முன்னர் பல்வேறு சமயங்களில் ஆசிரிய நண்பர்களுக்கு விளக்கி கட்டுரை வெளியிட்டுள்ளோம். வேதனைகளை விமர்சனங்களாக்க  விரும்பவில்லை. அதில் உடன்பாடும் இல்லை. தகுதியான ஆதாரங்களை TATA வைத்துள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் நாம் இருக்கிறோம். பொறுமையுடன் காத்திருங்கள். நீதிமன்றம் செல்வோம் நிச்சயம் வெல்வோம்.

No comments:

Post a Comment