PAGEVIEWERS

இடைநிலை ஆசிரியருக்கு ஊதிய உயர்வுக்கு வழங்க மறுத்து நிதித்துறை செயலாளர் கடிதம் எண் ;60473/CMPC/2014 நாள் 10.12.2015 அய் எதிர்த்து நீதிமன்றத்தில் நமது சங்கம் சார்பாக தாக்கல் செய்துள்ள நமது வழக்கின் அபிடவிட் நகல் .எந்த சங்கமும் தனது வழக்கின் நகலை முழுமையாக வெளியிட்டது இல்லை .நமது சங்கம் எதிலும் ஒளிவு மறைவு இல்லாமல் அனைவரும் அனைத்தையும் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் வெளியிடப்படுகிறது .

மேற்படி கடிதப்படி மத்திய அரசில் 1017 ஆசிரியர்கள் தான் உள்ளனர் என்பது பொய்யானது என்பதற்கான ஆதாரங்கள் மற்றும் தமிழ் நாட்டில் 1,16,129 பேர் ரூ 2800 ல் இல்லை   மேற்படி தகவல் பொய்யானது என்பதற்கான ஆதாரங்கள் எல்லாம் சேர்த்து வழக்கு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது .

மேற்படி வழக்கு நீதியரசர் திரு.வெங்கடாசல முர்த்தி அவர்கள் தலைமையில் நீதிமன்ற ஆணைப்படி நடைபெறும் ஊதிய குறை தீர்க்கும் கமிசன் நடைமுறைக்கான அரசு ஆணை கிடைக்க கால தாமதம் ஏற்பட்டு வருவதால் தான் மேற்படி ஊதிய வழக்கை விசாரணைக்கு கொண்டு வராமல் காலம் தாழ்த்தி வருகிறோம் ,.மேற்படி அரசு ஆணை இருந்தால் எமக்கு அனுப்பிடவும் .அது இருந்தால் வழக்கு மிக மிக விரைவில் முடிந்துவிடும் .
மேலும் நமது ஊதிய பிரச்சனை மிக மிக விரைவில் முடிந்து நமக்கு 9300+4200 ஊதியம் கிடைக்கும்










No comments:

Post a Comment