PAGEVIEWERS

நெல்லை மாவட்டத்தில் ''நிர்வாக பணி மாறுதல் ''ஊழல் -தடுப்பு காவல் துறை 02.05.2015 ல் விசாரணை ;-

நெல்லை மாவட்டத்தில் கடந்த 2010 முதல் பெரும்பாலும் காலிப்பணியிடங்கள் பொது மாறுதல் கலந்தாய்வில் காட்டப்படுவது இல்லை பல பணியிடங்கள் ''நிர்வாக பணி மாறுதல் '' என்ற பெயரில் 7 இலச்சம் வரை பெற்றுக்கொண்டு நிரப்பி விடுகிறார்கள் .இதனால் பலர் பாதிக்கப்பட்டனர் இதை தடுக்கவும் நேர்மையான முறையில் அனைத்து பணியிடங்களும் நிரப்ப பட டாட்டா சங்கம் மட்டுமே போராடி வருகிறது.நாங்கள் தான் பெரிய சங்கம் என்பவர்கள் எல்லாம் சில பணியிடங்களை பெற்றுக்கொண்டு எந்த ஊழலை கண்டு கொள்வது இல்லை .
இதற்கு நிரந்தர முடிவு கட்டப்பட ஊழல் தடுப்பு காவல் துறை விசாரணை வேண்டி பல முறை ஆதரங்களுடன் புகார் கொடுக்கப்பட்டது .மேற்படி புகார் படி 2010 க்கு பின் மாவட்ட தொடக்க கல்வி அலுவலராக பணி செய்த ( 4 ) அனைவர் மற்றும் அலுவலக பணியாளர்கள் 3 மீதும் FIR பதிவு செய்திட Crl.OP.(MD) NO.17068/2014 .மதுரை உயர் நீதிமன்ற கிளையில் வழக்கு பதிவு செய்து வழக்கு நடத்தி வருவதன் பயனாக தற்போது விசாரணைகள் உச்ச கட்ட நிலையை அடைந்து உள்ளது .தொடக்க கல்வி இயக்குனர் அவர்களின் ஆணை படி கடந்த 23.4.2015 மற்றும் 24.4.15 ஆகிய நாள்கள் நெல்லை DEEO அலுவலகத்தில் வைத்து இணை இயக்குனர் தலைமையில் நடைபெற்றது .மறுபக்கம் ஊழல் தடுப்பு காவல் துறை விசாரணைநடந்து வருகிறது வருகிற 02.05.2015 அன்று காவல் துறையிடம் ஆஜர் ஆகி ஆதரங்களை சமர்பிக்க டாட்டா பொது செயலாளர் கிப்சன் அவர்களுக்கு அழைப்பு கொடுக்கப்பட்டு உள்ளது.ஏற்கனவே கடந்த 23.04.2015 அன்று  இணை இயக்குனர் அவர்களிடம் நேரில் ஆஜர் ஆகி கிப்சன்அவர்களால் 140 பக்கம் கொண்ட சட்ட ஆவணங்கள் ஊச்ச நீதிமன்ற தீர்ப்புகள் அரசு ஆணைகள் மற்றும் 640 நிர்வாக மாறுதல் ஆணைகள் சமர்பிக்கப்பட்டு உள்ளது .மேற்படி இதே ஆதாரங்கள் ஊழல் தடுப்பு காவல் துறை விசாரணையில் கொடுக்கப்பட உள்ளது .
    டாட்டா சங்கத்தின் பெரிதான முயற்சியால் கடந்த வருங்காலங்களில் நேர்மையான முறையில் கலந்தாய்வு நடை பெற ஊழலை எதிர்க்கும் ஆசிரியர்கள் டாட்டா சங்கத்திற்கு தோல் கொடுக்க அழைக்கிறோம் .நாங்கள் தான் பெரிய சங்கம்என்பவர்களால் ஏன் மேற்படி ஊழலை ஒழிக்க முடிய வில்லை சிந்தியுங்கள் -???? 

No comments:

Post a Comment