PAGEVIEWERS

G.O. 200 நாள்:10.07.15 -ன் விளக்கம்.

சுருக்கம்: Associations / Individual employees - யிடமிருந்து பெறப்பட்ட ஊதிய திருத்தம் சார்பான கோரிக்கைகள் General Pay Revision - க்காக Commission அமைக்கப்படும் வரை ஒத்திவைக்கப்படுகிறது. ( Deferred) 
 
விளக்கம்:  அரசாணை 234 - ன்படி. ஊதியம் வழங்கப்பட்டதாம். பின்னர் ஒருநபர் குழுவானது ஊதிய முரண்பாடுகள் களையவும் குறிப்பாக ஆசிரியர் சங்கங்கள் மத்திய அரசுக்கு இணையாக ஊதியம் வழங்கிட கோரியவைகளை ஆய்வு செய்ய ( to examine ) அமைக்கப்பட்டதாம். பின்னர் நீதிமன்ற ஆணையின்படி ஊதிய குறை தீர்க்கும் பிரிவு (PGRC) அமைக்கப்பட்டு 4376 Representations பெறப்பட்டு 89 அரசாணைகள் பிறப்பிக்கப்பட்டு 2 இலட்சம் ஊழியர்கள் பயனடைந்தார்களாம். 


    இருந்தாலும் Individual Employees / Associations - ஆல் ஊதிய திருத்தம் கோரி வழக்குகள் தொடரப்பட்டதாம். மேலும் தகவல் அறியும் உரிமைச்சட்டம் மூலம் தனிநபர்/சங்கங்களால் பல்வேறு தகவல்கள் கோரப்பட்டதாம். இதனால் நிதித்துறைக்கு அதிகமான வேலைப்பழு ஏற்பட்டதாம். 

    தொடர்ந்து திருத்திய ஊதியம் வழங்கி ஒன்பது ஆண்டுகள் நிறைவடைந்து விட்டதால், ஊதிய திருத்தம் சார்பான கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாதாம். (Cannot be entertained) 

   (With retrospective effect என்பது முந்தைய தேதியிலிருந்து நடைமுறைப்படுத்தப்பட என பொருள் கொள்ளலாம்.)

    எனவே General Pay Revision ( அதாவது அடுத்த ஊதியகுழு) - ன் போது ஊதிய முரண்பாடுகள் குறித்தும், ஊதிய திருத்தம் சார்பான கோரிக்கைகள் குறித்தும் அரசு கவனத்தில் கொள்ள (to examine) முடிவு செய்துள்ளதாம். 

   எனவே Associations / Individual Employees - யிடமிருந்து பெறப்பட்ட ஊதிய திருத்தம் சார்பான கோரிக்கைகள் General Pay Revision - க்காக Commission அமைக்கப்படும் வரை ஒத்திவைக்கப்மடுகிறது (Deferred ) என இந்த அரசாணை மூலம் அரசு தெருவிக்கிறது. 
( அதாவது இனி சங்கமோ தனிநபரோ ஊதிய திருத்தம் சார்பாக அடுத்த ஊதியகுழு வரை வரவேண்டாம் என்கிறார்கள்.)

------------------------------------------          இது நம்ம புலம்பல்:
எனவே ஆசிரியர் சமுதாயமே நல்லா தூங்குங்க. தூங்கிக்கொண்டே இருங்க. நீங்கள் விழிப்படைந்தால் பலருக்கு பாதிப்பு. எனவே தயவுசெய்து தூங்குங்க. 
------------------------------------------
ஒருவேளை ஆகஸ்ட் 15, 1947 - க்கு முன் தான் உயிர் வாழ்கிறோமோ என்று நினைத்து காலண்டரை பார்த்தேன், 2015 JULY 10. சுதந்திர நாட்டில் இப்படியா ...................... 
என்ன சொல்லவோ. செய்தி ஆக்கம்: திரு. தாமஸ் ராக்லேண்ட், துணை பொது செயலாளர், TATA, திருச்சி

No comments:

Post a Comment