PAGEVIEWERS

*** கல்வி இயக்கக தெளிவுரைகளுடன்
உள்ள பதிவு...

தொடக்கக் கல்வித் துறை இடைநிலை ஆசிரியர்களின்
பி.எட்., கற்பித்தல் பயிற்சிக்கு---
ஊதியமில்லா விடுப்பு எனும் நிலையை மாற்றி
முழு ஊதியம் வழங்கிட வேண்டும். ***

** அரசு ஊழியர்கள் அனைவருக்கும் 180 நாட்கள்
சொந்த அலுவலின் பேரிலான ஈட்டா விடுப்பு
( UEL PA )உள்ளது. **

* இந்த 180 நாட்களை ஓய்வு பெறும் போது ஒப்புவிப்பு
செய்து 180 நாட்களுக்கு அரைச் சம்பளம் வீதம்
90 நாட்களுக்கு ஊதியம் பெறலாம். *

** ஆசிரியர்கள் இந்த 180 நாட்களில்
சுமார் 30 நாட்கள் கற்பித்தல் பயிற்சிக்கு சென்றால்,
நாம் எடுக்கும் 30 நாள் UEL PA விடுப்புக்கு,
15 நாள் ஊதியம் கிடைக்கும். **

** நம்முடைய இருப்பு 180-30=150 ஆக குறையும்.
எனவே ஓய்வு பெறும் போது, 75 நாட்களுக்கு
மட்டுமே ஊதியம் பெற முடியும்.
கற்பித்தல் காலம்-15 நாள் ஊதியம்+
ஓய்வு சமயம். -75 நாள் ஊதியம்=
மொத்தம். -90 நாள் ஊதியம் **

* கற்பித்தல் பயிற்சிக்கு LLP எடுத்து விட்டால்,ஓய்வு சமயம்
180 நாள் UEL PA க்குரிய 90 நாள் ஊதியம் பெறலாம். *

** எனவே கூட்டிக் கழித்துப் பாருங்களேன்...
தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கு...
அப்போ...அந்த ஒரு மாத ஊதியம்....?
Loss of pay தான். **

* எனவே நாம் பெறுவது அரைச் சம்பளம் அல்ல.
நமக்கு ஒரு மாத ஊதியம் இழப்பு ஏற்படுகிறது
என்பதை நாம் அறிய வேண்டியது மிகவும் அவசியம். *

**** பள்ளிக் கல்வித்துறை
அரசுக் கடித எண்.48269/எம்2/94 நாள்.28.12.95

பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்
3849/சி32/96 நாள்.3.2.96

ஆகியவற்றின் படி
அரசு உயர்நிலை மற்றும் அரசு மேல்நிலைப் பள்ளிகளில்
பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்கள்,தமிழாசிரியர்கள்,
உடற்கல்வி ஆசிரியர்கள்,தொழிலாசிரியர்கள்
ஆகியோர்கட்கு

பி.எட்., கற்பித்தல் பயிற்சிக்கு முழு ஊதியம்
வழங்க உத்தரவிடப்பட்டது. ****

*** எனவே தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கும்
கற்பித்தல் பயிற்சிக்கு
LLP - Leave On Loss Of Pay என்பதை மாற்றி
முழு ஊதியம் பெற்றுத் தர வேண்டும். ***

👆 * மேற்காணும் செயல்முறைகளின் படி...
ஓய்வு நேரம் பயிற்சி எடுக்கலாம்.
பிஎட்., கற்பித்தல் பயிற்சி வகுப்பு எடுத்தல் காரணமாக
1.பள்ளி பாடநேரம் பாதிக்கப் படக் கூடாது.
2.பாடக் குறிப்பு எழுதுவது பாதிக்கக் கூடாது
3.பயிற்சி ஏடுகள் சரிபார்க்க வேண்டும்
4.தேர்வுகள் வைக்க வேண்டும்
5.கற்பித்தல் பாதிக்கக் கூடாது
என்ற நிபந்தனையின் பேரில் பள்ளிக் கல்வித்துறையில்
முழு ஊதியம் வழங்கப்படுகிறது. *

** தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள்
படிக்க அனுமதி பெறும் போது...
மேலே காணும் இது போன்ற நிபந்தனைகளுடன்
அனுமதி தரப்படுகிறது. **

* தொடக்கப் பள்ளிகளில் 1-5 வகுப்புகளுக்கு
வகுப்புக்கு ஒரு ஆசிரியர் இல்லை.
பெரும்பாலான பள்ளிகள் ஈராசிரியர் பள்ளிகளாகவும்,
சில பள்ளிகள் மூன்று ஆசிரியர் பள்ளிகளாகவும்,
சில பள்ளிகள் மூன்றுக்கு மேற்பட்ட ஆசிரியர் உள்ள
பள்ளிகளாகவும் உள்ளன. *

* எனவே தொடக்கக் கல்வித் துறையில்...
விடுப்பு முடிந்து வந்து மீண்டும்
சம்பந்தப்பட்ட இடைநிலை ஆசிரியர் தான்
பாடங்களை நடத்தணும்,
பாட நோட்டுக்களையும் திருத்தணும்,
தேர்வும் வைக்க வேண்டும்,
பாடம் சார்ந்த பதிவேடுகளை
சம்பந்தப்பட்ட விடுப்பு ஆசிரியர் தான்
பராமரிக்க வேண்டும். *

* எனவே முழு பணி செய்தாலும் ஊதியமில்லை. *

** நடுநிலைப் பள்ளியில் பணிசெய்து, அங்கேயே
கற்பித்தல் பயிற்சி செய்தால் முழு ஊதியம்
தரப்படுகிறது.

உயர்நிலை/மேல்நிலைப் பள்ளியில் பணி செய்து
அங்கேயே கற்பித்தல் பயிற்சி செய்தால் முழு ஊதியம்
தரப்படுகிறது. **

* ஆனால் தொடக்கப் பள்ளி/நடுநிலைப் பள்ளியில்
பணிசெய்து , உயர்நிலைப் பள்ளியில் கற்பித்தல் செய்தால்
முழு ஊதியம் தரப்படுவதில்லை. *

*** Primary Teacher க்கு
Full work உண்டு.
But
No pay
For
Teaching practice... ***

** ஒவ்வோர் ஆண்டும் ஆசிரியர்கட்கு ஊதியம் வழங்க
அந்த கணக்குத் தலைப்பின் கீழ் அரசால் நிதி
விடுவிக்கப்படுகிறது.

எனவே நாம் கற்பித்தல் பயிற்சிக்கு செல்லும் போது,
வழங்கப்பட்ட ஊதியம் போக, எஞ்சிய ஊதியம்
அரசிடம் ஒப்புவிப்பு செய்யப்படுகிறது.

எனவே இது நிதிச்சுமை சாராத கோரிக்கை. **
**** பள்ளிக் கல்வித் துறை,நிதித் துறை,
பணியாளர் & நிர்வாக சீர்திருத்தத் துறைகளின்
பார்வைக்கு எடுத்துச் சென்று,
தொடக்கப் பள்ளி இடைநிலை ஆசிரியர்கட்கு
கற்பித்தல் பயிற்சிக்கு முழு ஊதியம் பெற
நடவடிக்கை எடுக்க வேண்டும். *** .

No comments:

Post a Comment