PAGEVIEWERS

10-06-2016.உயர்திரு தொடக்கக் கல்வி இயக்குநர் அவர்களை சந்தித்து தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் சங்கம் TATA சார்பில் கோரிக்கைகள் அளிக்கப்பட்டன.



கோரிக்கைகள்:- 

1.மாணவர்களின் விலையில்லா நலதிட்ட பொருட்கள் பள்ளிக்கே நேரடியாக வழங்கப்பட வேண்டும்.

இயக்குனர் பதில் ;-அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் .

2.தெலுங்கு,உருது,கன்னடம் ,மலையாளம்
நடுநிலைப்பள்ளிகளில் கல்வி உரிமை சட்ட படி   தமிழ் பட்டதாரி பணியிடங்களை ஏற்படுத்தி பதவி உயர்வு வழங்க வேண்டும்.
இயக்குனர் பதில்;-  -அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று விரைவில் புதிய பணியிடங்கள் உருவாக்க பட்டு பதவி உயர்வு வழங்கிட நடவடிக்கை எடுக்கப்படும் .


 3.1997-98 ல் பின்னடைவு காலி பணியிடத்தில் (SC/ST) பணியேற்ற பட்டதாரி தகுதியுடைய இடைநிலை ஆசிரியர்களுக்கு வரும் கலந்தாய்வில் பதவி உயர்வு வழங்கிட வேண்டும்.
 இயக்குனர் பதில்;- உரிய நடவடிக்கை எடுக்கப்படும் .

 4.இடமாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வினை ஒளிவு மறைவின்றி உடனடியாக நடத்திட வேண்டும்.
இயக்குனர் பதில்;- தற்போதைய நிலையில் அரசு பணி மாறுதல் குறித்து இறுதி முடிவு எதுவும் எடுக்க வில்லை .

  5.Economics,commerce,(M.A M.COM WITH B.ED) படித்த இடைநிலை ஆசிரியர்களுக்கு பட்டதாரி பதவி உயர்வு வழங்கிட வேண்டும்.வினையாக மிஷன் பட்ட படிப்புகளுக்கு ஊக்க ஊதியம் அனுமதிக்க வேண்டும்.பின்னேற்பு வேண்டி 1.5 வருடமாக நிலுனையில் உள்ள கோப்புகளுக்கு விரைந்து அனுமதி வழங்கிட வேண்டும்.
இயக்குனர் பதில்;-  விரைவில் 2   வாரத்திற்குள் இவற்றிற்கு அரசு ஆணை வெளிவரும்.அதன்பின் பணபலன் பெற உரிய தெளிவுரை வழங்கப்படும்


  6.மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்களை உடனடியாக வழங்கிட வேண்டும்.
 இயக்குனர் பதில்;-  விரைவில் வழங்கிட உள்ளது.

7. தனியார் பள்ளி சட்டம் 1973 சட்ட பிரிவு 31 ன் படி இயக்குனர் அனுமதி இல்லாமல் நிதிஉதவி பெறும் தனியார் பள்ளிகளை விற்பனை செய்வதோ அல்லது தனது வாரிசுகளுக்கு தனமாகவோ ,நன்கொடையாகவோ கொடுப்பது செல்லாது என்பது கூறித்து அணைத்து DEEO களுக்கும் தெரிவுரை வழங்கிட வேண்டும்.முன் அனுமதி பெறாமல் மாற்றம் செய்யப்பட்ட பள்ளி நிர்வாக மாற்ற ஆணை ரத்து செய்திட வேண்டும். 
 இயக்குனர் பதில்;-  விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் வழங்கிய பள்ளிகள் பற்றி எனது கவனத்திற்கு கொண்டு வந்தால் நிர்வாக மாற்றம் ரத்து செய்யப்படும்.
 

No comments:

Post a Comment