PAGEVIEWERS

பிடியாணை இன்றி கைது செய்ய கூடிய குற்றங்கள், பிடியாணைவுடன் கைது செய்ய கூடிய குற்றங்கள் என்னென்ன என்பதை இந்திய தண்டனை சட்டத்தில் தெரிந்துகொள்வது இவ்வாறு தான்.
அதாவது, இரண்டு வருடங்களுக்கு மேல் தண்டனை பெற கூடிய குற்றங்களை ஒரு நபர் செய்து இருந்தால்,அந்த நபரை பிடியாணையின்றி கைது செய்யலாம்.
அதே மாதிரி ஒரு நபர் இரண்டு வருடங்களுக்குள் தண்டனை பெற கூடிய குற்றங்களை செய்து இருந்தால் ,அந்த நபரை பிடியாணைவுடன் தான் கைது செய்ய வேண்டும்.



இவற்றை பற்றி குற்றவியல் விசாரணை முறை சட்டம் 1973 சட்டப்பிரிவு 2(22) விளக்குகின்றது.
மேற்படி இந்திய தண்டனை சட்டத்தில் பிணையில் விடுவிக்கக்கூடிய குற்றங்கள் மற்றும் பிணையில் விடுவிக்கக்கூடாத குற்றங்கள் பற்றியும் சொல்லப்பட்டுள்ளது.

பிணையில் விட கூடிய குற்றங்களுக்கு எப்.ஐ.ஆர் பதிவு செய்யாமல் புலன் விசாரணை செய்து ,விசாரணைக்கு பின் எப்.ஐ.ஆர் தேவை என்றால் எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்படும்.

பிணையில் விட கூடாத குற்றங்களுக்கு எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டு புலன் விசாரணை மேற்கொள்ளப்படும்.

No comments:

Post a Comment