PAGEVIEWERS

பிச்சை எடுக்கும் அரசு ஊழியர்கள்


அநீதிக்கு எதிராக அரசின் குரல்வளையை இறுக்கிப் பிடிக்க வேண்டாமா..
{ ( * ) நானும் களத்தில் உள்ளேன் என்று காட்டிக்கொள்ள மட்டும் தான் இந்த குரலோ.. }
உயிர் காக்கும் அரசின் கட்டணமில்லா மருத்துவ காப்பீட்டுத் திட்டம் இருந்தும்... மருத்துவமனையில் இன்னும் கொஞ்சம் சேத்துக் கொடுங்க (காப்பீட்டுத்தொகையினை) என்று அரசு ஊழியர்கள் பிச்சை எடுக்கும் அவல நிலை..
உன் அப்பன் வீட்டு காசையா கேட்கிறான் அரசு ஊழியன்.. மாதம் தவறாமல் பிடித்தம் செய்யப்பட்ட தனக்கான காப்பீட்டுத் தொகையினைத் தானே கேட்கிறான்..
ரூ.4,00,000 காப்பீட்டுத் தொகை இருந்த பொழுதே அதில் ரூ.50,000 வாங்க படாத பாடு..
இதில் குறிப்பிட்ட 2 சிகிச்சைக்கு மட்டும் ரூ.7,50,000-மாம் ..
யாருக்காக இந்த மாற்றம்..
அரசு ஊழியனிடம் பிடுங்கிக் கொடுத்த (தனியார் காப்பீட்டு நிறுவனத்திடம்) ரூ.150-ஐ ரூ.180 ஆக உயர்த்த மட்டும் தான் இந்த மாற்றம்..
2008 மே மாதம் வரை HF ரூ.10 பிடித்தம் செய்து 1,00,000 காப்பீட்டுத்தொகை வழங்கப்பட்டது, பிறகு ரூ.25 க்கு 2,00,000 ஆக மாற்றம், அதன் பிறகு ரூ.150-க்கு 4,00,000 ஆனது. ஆனால் தற்பொழுதோ அதே 4,00,000 காப்பீட்டுத் தொகைக்கு ரூ.180 பிடித்தம்
கொடுப்பதோ ரூ.100 (MA) ஆனால் பிடுங்குவதோ ரூ.180
சரி பிடுங்கிய காப்பீட்டுத் தொகையாவது ஆபத்து காலத்தில் பெற முடிகிறதா அதுவும் இல்லை..
மாதம் மாதம் 10,22,000 அரசு ஊழியர்களிடம் ரூ.180 பிடித்தம் செய்தால்.
*10,22,000×180=ரூ.18,39,60,000 (ஒரு மாதத்தில் மட்டும் 18 கோடி)*
ஒரு வருடத்தில் 18,39,60,000×12=ரூ.220,75,20,000.
4 வருடத்தில் 220,75,20,000×4=ரூ.883,00,80,000
நான்கு வருடம் ஒப்பந்தம் செய்த தனியார் நிறுவனத்திற்கு அரசு நம்மிடமிருந்து பிடுங்கிக் கொடுக்கும் மொத்த தொகை ரூ.883 கோடிகளுக்கு மேல்.. (4 வருடத்தில் மட்டும்)
ஆனால் காப்பீட்டு நிறுவனம் இதற்காக செலவிடும் காப்பீட்டுத் தொகை சொற்ப அளவு தான்..
இப்படி இருக்க 10,22,000 அரசு ஊழியர்களில் எத்தனை பேர் 4 வருடங்களில் சிகிச்சை பெறுவர்...???
இதுவும் சொற்ப அளவு தான்...

சொற்ப அளவில் மட்டுமே சிகிச்சை பெறும் அரசு ஊழியர்களுக்கு காப்பீட்டுத் தொகையும் சொற்ப அளவில் பிச்சையாக வழங்கப்படுகிறது..???
இந்த முறைகேடுகளை செய்தித்தாளில் வெளியிடுவதுடன் சங்கங்களின் பணி முடிந்துவிட்டதா...??
அதனால் மயிர்நுனி அளவுகூட பயன் ஏதும் இது வரை இல்லையே...
மாநில அமைப்பில் உள்ள இயக்கவாதிகள் இதுநாள்வரை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு செல்லவில்லையா என்ன...???
இல்லை, இந்த முறைகேடுகளை தட்டிக் கேட்க திராணி இன்றி தனது சொந்த செலவில் சிகிச்சை பெறுகின்றனரோ..??
இல்லை, தனது செல்வாக்கைப் பயன்படுத்தி தான்மட்டும் முழு காப்பீட்டு உரிமையையும் பெற்றுவிடுவதால் கீழ்மட்டத்தில் உள்ளவர்களின் அவல நிலை பற்றி கவலையில்லையோ...???
இது எதுவாயினும் அரசு ஊழியனின் உயிர்காக்க சங்கங்களின் ஒன்றுபட்ட போராட்டம் தேவை..
நமது உரிமைகளை பிச்சையாக பெற முடியாது தோழர்களே..
இனியும் இழப்பதற்கு அரசு ஊழியனின் உயிர் மட்டுமே மிச்சமுள்ளது..

அதைக் காக்கவாவது சங்கங்கள் சுயநலமின்றி ஓரணியாய் திரள வேண்டும்..
கட்டணமில்லா மருத்துவ சிகிச்சையை உறுதிசெய்ய முயற்சி மேற்கொள்ள வேண்டுமாய் அனைத்து ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் சார்பாக தமிழக அரசையும் நிதித்துறையும் கேட்டுக்கொள்கிறேன்-----

No comments:

Post a Comment